வேட்பாளர் மீதான குற்ற வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாத கட்சியின் தலைவர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.குற்றப்பின்னணிஉத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் துவங்கி நடக்கவுள்ளது. இதில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில்
SC, court, Supreme Court,உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாத கட்சியின் தலைவர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


குற்றப்பின்னணி


உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் துவங்கி நடக்கவுள்ளது. இதில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் நாஹித் ஹசன் என்ற ரவுடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரது குற்றப்பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news



அதன் விபரம்:


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ரவுடிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்குகின்றன. இதனால் தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குற்ற பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் அளிப்பதோடு, அவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பதையும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு விளக்க வேண்டும்.


அவமதிப்பு


இந்த உத்தரவை மீறும் கட்சி தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதோடு, அக்கட்சியின் பதிவை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஜன-202209:41:17 IST Report Abuse
duruvasar விளம்பரம்செய்தாலும் கவலையில்லை என்று. ராஜா ராணி மாதிரி வலம் வருவார்கள்.
Rate this:
Cancel
teees - madras,இந்தியா
18-ஜன-202208:23:21 IST Report Abuse
teees காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தால் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X