நிதி, நிர்வாகம் இல்லாத போக்குவரத்து குழுமம் முதல்வர் பார்வைக்காக காத்திருப்பு

Added : ஜன 18, 2022 | |
Advertisement
சென்னை--முதல்வர் தலைவராக உள்ள ஒருங்கிணைந்த சென்னை பெருநகர் போக்குவரத்து குழுமமான, 'கும்டா' நிதி ஒதுக்கீடு, நிர்வாக அமைப்பு இன்றி தள்ளாடும் நிலைஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, 'கும்டா' என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர்

சென்னை--முதல்வர் தலைவராக உள்ள ஒருங்கிணைந்த சென்னை பெருநகர் போக்குவரத்து குழுமமான, 'கும்டா' நிதி ஒதுக்கீடு, நிர்வாக அமைப்பு இன்றி தள்ளாடும் நிலைஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, 'கும்டா' என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர் போக்குவரத்து குழுமம், முந்தைய தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 2010ல் ஏற்படுத்தப்பட்டது.கடந்த, 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2012ல் இதன் முதல் கூட்டம் நடந்தது. அதன் பின் இக்குழுமம் செயல்பாடு இன்றி முடங்கியது.உலக வங்கி வலியுறுத்தல் அடிப்படையில், இதன் நிர்வாக அமைப்பை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இதன் தலைவராக முதல்வர் இருக்கும் வகையில், 2020ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.இதையடுத்து, மேலும் சில நிர்வாக ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டாலும், அப்போதைய முதல்வரின் நேரம் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:போக்குவரத்து சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைக்க, கும்டா முறையாக செயல்பட வேண்டியது அவசியம். முதல்வர் தலைவராக உள்ள இந்த குழுமத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை.மேலும், சட்டப்படி இது தனி குழுமம் என்று கூறப்பட்டாலும், நிர்வாக அமைப்பு, அலுவலகம் இல்லாமல் சி.எம்.டி.ஏ.,வின் ஒரு பிரிவு போன்று முடங்கி உள்ளது.தமிழகத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள அரசு, போக்குவரத்து சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இத்திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவும், அரசு நிதி முறையாக செலவிடப்பட வேண்டும் என்பதற்காக இக்குழுமம் செயல்பட வேண்டும்.இதற்கு முதல்வர் மற்றும் உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X