நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

Added : ஜன 18, 2022
Advertisement
சென்னை--சென்னை எழும்பூர் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், நாகர்கோவில் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் எழும்பூர் - தாம்பரம் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, மாலை 6:55 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில், வரும் 20, 27, பிப்., 3, 10, 17, 24 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து

சென்னை--சென்னை எழும்பூர் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், நாகர்கோவில் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் எழும்பூர் - தாம்பரம் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, மாலை 6:55 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில், வரும் 20, 27, பிப்., 3, 10, 17, 24 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நாட்களில், தாம்பரம் நிலையத்தில் இருந்து, இரவு 7:30 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும்.நாகர்கோவிலில் இருந்து, வரும் 21, 28, பிப்., 4, 11, 18, 25,ம் தேதிகளில், மாலை 4:15 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில், மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்தடையும். தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X