வயலுார் ஊராட்சி வளர்ச்சி அடைவது எப்போது?

Added : ஜன 18, 2022
Advertisement
வயலுார்-எவ்வித வசதியும் இல்லாத வயலுார், வளர்ச்சி அடைவது எப்போது என்ற கேள்வி, பொதுமக்களிடையே எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வயலுார் ஊராட்சி. இந்த ஊராட்சியில், வயலுார், சூரகாபுரம், உச்சிமேடு, மும்முடிக்குப்பம், அகரம் ஆகிய கிராமங்களில், ஒன்பது வார்டுகள் உள்ளன.இங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.விவசாயத்தை நம்பியே

வயலுார்-எவ்வித வசதியும் இல்லாத வயலுார், வளர்ச்சி அடைவது எப்போது என்ற கேள்வி, பொதுமக்களிடையே எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வயலுார் ஊராட்சி. இந்த ஊராட்சியில், வயலுார், சூரகாபுரம், உச்சிமேடு, மும்முடிக்குப்பம், அகரம் ஆகிய கிராமங்களில், ஒன்பது வார்டுகள் உள்ளன.இங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் அடிப்படை மருத்துவ வசதிக்கு அவதிப்படுகின்றனர். ஏனெனில், மக்கள் தங்கள் அடிப்படை மருத்துவ வசதிக்குக்கூட இங்கிருந்து, 7 கி.மீ., துாரமுள்ள உழுந்தை கிராமத்திற்கு செல்ல வேண்டும் அல்லது, 15 கி.மீ., துாரமுள்ள, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுங்குவார்சத்திரம் செல்ல வேண்டும்.இதனால், நேரம் மற்றும் பணம் விரயம் ஏற்படுவதோடு, சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது.எனவே, கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.மேலும், ஊராட்சி பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், பெண்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சேதமடைந்து, பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால், பெண்கள் அவதிப்படுகின்றனர்.இதே போல், ஊராட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு, மின் இணைப்பு, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், இதுவரை பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.இதனால், மக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு, தனியார் மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பயன்பாடில்லாத சமுதாயக் கூடம், தற்போது கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.பராமரிப்பு இல்லைஊராட்சி பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை அருகே, 30 ஆண்டுகளுக்கு முன், மக்கள் பயன்பாட்டிற்காக, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல், இதுவரை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மக்களுக்கு நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தொட்டியில் மேற்புரம், சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.மேலும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் 'குடி'மையமாக மாறி வருகிறது.இவ்வாறு உள்ள வயலுார் ஊராட்சி வளர்ச்சி அடைவது எப்போது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X