பள்ளி நுழைவாயிலில் கழிவு நீர் கால்வாய்

Added : ஜன 18, 2022
Advertisement
ஆர்.கே.பேட்டை-அரசினர் மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயிலில், திறந்தவெளியில் கால்வாய் உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் கழிவு நீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளது.

ஆர்.கே.பேட்டை-அரசினர் மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயிலில், திறந்தவெளியில் கால்வாய் உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் கழிவு நீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளது. இதனால், துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இதுதவிர திறந்தவெளியில் கால்வாய் உள்ளதால் பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் போது கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.திறந்தவெளி கால்வாயை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.எனவே, கலெக்டர் உடனடியாக நேரில் பார்வையிட்டு திறந்துவெளி கால்வாயை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X