மப்பேடு-மப்பேடு ஊராட்சியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய கூடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்ளை பொதுமக்கள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, எம்.பி.. தொகுதி நிதி ஒதுக்கீடு, மற்றும் அரசு, தனியார் நிறுவனம் பங்களிப்புடன் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.காவல் நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் ஆண்டு பணிகள் துவங்கின.ஓராண்டாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்திஉள்ளது.ஒன்றிய அதிகாரிகள், மப்பேடு ஊராட்சியில், சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE