மொபைல் போன் இடையூறு; நீதிபதிகள் கடும் கோபம்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி : வழக்கு விசாரணைக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரான வழக்கறிஞர்களின் மொபைல் போன்களால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டதால், அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சாடினர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதிகள் போபன்னா
Mobile Phones, Supreme Court, Virtual Hearings

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : வழக்கு விசாரணைக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரான வழக்கறிஞர்களின் மொபைல் போன்களால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டதால், அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சாடினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதிகள் போபன்னா மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன், நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர்கள் பயன்படுத்திய மொபைல் போன்களில் பிரச்னைகள் ஏற்பட்டன.


latest tamil news


அடுத்து வந்த சில வழக்கு விசாரணைகளிலும் இதே பிரச்னை நிலவி வந்தது. சத்தம் கேட்காமலும், வீடியோ தெரியாமலும் வழக்கறிஞர்களின் மொபைல் போன்களில் கோளாறுகள் ஏற்பட்டதால் நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:வழக்கு விசாரணைக்கு மொபைல் போன் வாயிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருக்கும் உங்களால், அதற்கான கம்ப்யூட்டர் சாதனங்களைக்கூட வாங்க முடியதா?

இந்த சிக்கலுக்கு மத்தியில் எங்களால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. உங்கள் வாதங்களை நாங்கள் தெளிவாக கேட்க வேண்டும். அதற்கு ஏற்றபடி உரிய சாதனங்களை வைத்து விசாரணைக்கு ஆஜராகுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
18-ஜன-202209:38:28 IST Report Abuse
அம்பி ஐயர் அதான லட்சக் கணக்கில் சம்பளமும் இன்னபிற படிகளும்.... பொதுமக்களிடமிருந்து ஃபீசும் வாங்குகின்றனர்.... அவர்களால் மடிக்கணினியோ அல்லது கணினியோ வாங்கிக் கூட உபயோகப்படுத்த முடியாதா என்ன....???
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-ஜன-202209:19:05 IST Report Abuse
R.RAMACHANDRAN ஒவ்வொரு வழக்கிற்கும் கோடி கணக்கில் கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞ்சர்கள் கணினி சாதனங்களை வாங்க முடியவில்லை.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
18-ஜன-202209:03:09 IST Report Abuse
தமிழன் கோடில கொள்ளையடிக்குறவனால ஒரு டெஸ்க்டாப் வாங்க முடியல்ல. பரிதாபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X