ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துவாரங்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை கடவுளின் உருவம் என, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள நவகாவ்ன் லோதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹேமந்த் சந்தல். இவரது வீட்டில் வளர்ந்து வரும் 'ஜெர்ஸி' இன பசு சமீபத்தில் கன்று ஈன்றது.அந்த கன்று மூன்று கண்களுடன் பிறந்தது. இரண்டு கண்களுக்கு நடுவே நெற்றியில் மூன்றாவது கண் உள்ளது. மேலும், நான்கு நாசி துவாரங்களும் உள்ளன. கன்றுக் குட்டியின் நாக்கு வழக்கத்தை விட சற்று நீளமாக உள்ளது.
இது குறித்து தகவல் பரவியதும் அருகில் உள்ள கிராமத்து மக்கள் ஹேமந்த் வீட்டில் குவியத் துவங்கினர். அந்த கன்றுக்குட்டி சிவனின் அம்சம் என கூறி, மலர் துாவி வழிபாடு செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, மக்கள் வரிசையில் நின்று கன்றுக்குட்டியை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'கருவில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியின் காரணமாக இது போன்ற கன்றுக்குட்டிகள் பிறப்பது உண்டு. இதில் அதிசயிக்க எதுவும் இல்லை' என, கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE