செயற்கை சூரியனை தொடர்ந்து செயற்கை நிலவு: சீனா சாதனை

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (9)
Advertisement
பீஜிங் : ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக சிறிய செயற்கை நிலவை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.நம் அண்டை நாடான சீனா, விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது. மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது. விண்வெளியில் தனி ஆய்வுக் கூடத்தை அமைக்கிறது.'ரோவர்' வாகனத்தை நிலவில் இறக்கி மண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
China, artificial Moon, mini moon

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங் : ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக சிறிய செயற்கை நிலவை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நம் அண்டை நாடான சீனா, விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது. மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது. விண்வெளியில் தனி ஆய்வுக் கூடத்தை அமைக்கிறது.'ரோவர்' வாகனத்தை நிலவில் இறக்கி மண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகில் முதன் முறையாக செயற்கை நிலவை சீனா உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியதாவது:நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு. புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு, நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமானம் அல்லது 'டிராப் டவர்' சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.


latest tamil newsஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம்.

மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில் ஒரிஜினல் நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஜன-202217:41:55 IST Report Abuse
Rafi மனித ஜின் கூட்டத்தார்களே வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் அவ்வாறே செல்லுங்கள், வல்லமையும் நம் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது,சூரியனும் சந்திரனும், அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இருக்கின்றன,வானத்தை நானே உயர்த்தினேன், இரண்டு கடல்களை ஒன்றோடு ஒன்று சந்திக்க செய்தான், அவற்றிற்கிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீறமாட்டா, ஆராயுங்கால் அவனுடைய அருட்கொடைகளை, படித்தவனும், படிக்காதவனும் சமமாகமாட்டார்கள், அவனுடைய அருட்கொடையை எதை பொய்யாக்குவீர்கள் என்று மனித இனத்திற்கும் ஜின் இனத்திற்கும் அவனைப்பற்றி அறிந்து கொள்ள ஏக போக இறைவன் வற்புறுத்துகின்றான், உங்களுடைய ஆராய்ச்சிகள் அவனுடைய அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடும்.
Rate this:
Cancel
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-ஜன-202211:51:14 IST Report Abuse
Vamanan Nair அவன் சாதிக்கிறான். நாம் பேசிக்கொண்டும் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டும் இருக்கிறோம்.
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
18-ஜன-202210:47:12 IST Report Abuse
vasan டேய் நாசா, இஸ்ரோ முன்னாடி நீ ஒண்ணுமே இல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X