அரசு நெல் கொள்முதல் நிலையம்

Added : ஜன 18, 2022
Advertisement
படாளம்-படாளம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள், அறுவடை செய்த நெல்களை, குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர்.மதுராந்தகம் ஒன்றியம், படாளம் ஊராட்சிக்குட்பட்ட புளிப்புரக்கோவில் கிராமத்தில், இளைஞர் விளையாட்டு மைதானம் அருகே, அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக இயங்கி

படாளம்-படாளம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள், அறுவடை செய்த நெல்களை, குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர்.மதுராந்தகம் ஒன்றியம், படாளம் ஊராட்சிக்குட்பட்ட புளிப்புரக்கோவில் கிராமத்தில், இளைஞர் விளையாட்டு மைதானம் அருகே, அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.படாளம், புளிப்புரக்கோவில், சுற்று வட்டார கிராம விவசாயிகள், தங்கள் வயலில் அறுவடை செய்த நெல்களை, அரசு நெல் கொள்முதல் நிலையம் எடுத்து வந்து விற்பனை செய்தனர்.இந்தாண்டுக்கான நெல் கொள்முதல் நிலையம் இன்னும், இங்கு திறக்கப்படாத நிலையில், அறுவடை செய்த நெல், குவியல் குவியலாக விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். பாதுகாப்புக்காக தார்ப்பாய் போட்டு மூடியுள்ளனர்.மாவட்ட நிர்வாகம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X