பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் மீண்டும் துவக்கம்

Added : ஜன 18, 2022
Advertisement
சென்னை : 'பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எந்த பொருளும் விடுபடாமல், கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.பரிசு தொகுப்பு வினியோகம் ரேஷன் கடைகளில் இம்மாதம் 4ம்
 பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் மீண்டும் துவக்கம்

சென்னை : 'பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எந்த பொருளும் விடுபடாமல், கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.பரிசு தொகுப்பு வினியோகம் ரேஷன் கடைகளில் இம்மாதம் 4ம் தேதி துவங்கியது.இன்னும் 15 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ளனர். பொங்கல் விடுமுறைக்கு பின் வினியோகிக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது. இம்மாதம் 31ம் தேதி வரை அரசு அவகாசம் அளித்துள்ளது.

இந்நிலையில், நேற்று சில கடை ஊழியர்கள், கரும்பு உள்ளிட்ட சில பொருட்களை தர மறுப்பதாக கூறப்பட்டது.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் தவிர்த்த மற்ற பொருட்களை தருகின்றனர். அவற்றை தருமாறு கேட்டால் பொங்கல் தான் முடிந்து விட்டதே என்று கூறுகின்றனர்' என்றனர்.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில், பரிசு தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்களின் பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளது. பரிசு தொகுப்பு வாங்காத கார்டுதாரர்களின் பொருட்கள் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

எனவே, இதுவரை வாங்காத கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு வாங்க வந்தால், எந்த ஒரு பொருளும் விடுபடாமல் வழங்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என, ரேஷன் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் பொருட்களை தர மறுத்தால், கடைகளில் விளம்பரம் செய்துள்ள அதிகாரிகளின் மொபைல் போன் எண்களில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X