மாமல்லை கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள் பழுது

Added : ஜன 18, 2022
Advertisement
மாமல்லபுரம்-மாமல்லபுரம் கடற்கரை பகுதி கண்காணிக்க அமைக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா'க்கள் பயனின்றி சீரழிகின்றன.மாமல்லபுரம் கடற்கரை பகுதி, பல்லவர் தொல்லியல் கால கற்கோவிலுடன், அழகிய சூழலில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணியர், கோவிலை கண்டு களித்து, கடற்கரையில் உலவுகின்றனர். கடலில் ஆனந்தமாக குளிக்கின்றனர்.பயணியர் குவியும் நாட்களை தவிர்த்து, பிற நாட்களில், போலீசாரின்

மாமல்லபுரம்-மாமல்லபுரம் கடற்கரை பகுதி கண்காணிக்க அமைக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா'க்கள் பயனின்றி சீரழிகின்றன.மாமல்லபுரம் கடற்கரை பகுதி, பல்லவர் தொல்லியல் கால கற்கோவிலுடன், அழகிய சூழலில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணியர், கோவிலை கண்டு களித்து, கடற்கரையில் உலவுகின்றனர். கடலில் ஆனந்தமாக குளிக்கின்றனர்.பயணியர் குவியும் நாட்களை தவிர்த்து, பிற நாட்களில், போலீசாரின் கண்காணிப்பு, பாதுகாப்பு இல்லை. பயணியரிடம் வழிப்பறி கொள்ளை நடக்கிறது. பயணியர் தகராறு ஏற்பட்டு மோதிக் கொள்கின்றனர். இப்பகுதி சுற்றுலா முக்கியத்துவம் கருதி, கண்காணிக்க வேண்டியது அவசியம்.இதையடுத்து, தமிழக சுற்றுலாத் துறை, மத்திய சுவதேஷ் தர்ஷன் திட்டத்தில், இரு ஆண்டுகளுக்கு முன், 40 'சிசிடிவி கேமரா'க்கள் அமைத்தது.அடித்தள தாங்கி, அதன் மீது கம்பம், தலா ஒரு சுழலும் கேமரா, கடற்கரையை நோக்கி ஒரு கேமரா, சில அடிகள் ஆழ இணைப்பு கேபிள், கட்டுப்பாட்டு அறை என அமைக்கப்பட்டது. தற்போது வரை செயல்பாடு இல்லை.பல ஆண்டுகளுக்கு பயன்பட வேண்டிய கேமராக்கள், பயன்படுத்தப்படாமலே, கம்பங்கள் சேதமடைந்து, கேமராக்கள் மற்றும் பேட்டரிகள் மாயமாகி சீரழிந்து, கண்காணிப்பும் கேள்விக்குறியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X