செங்கை ஆர்.எம்.ஓ., மாற்றத்திற்கு எதிர்ப்பு

Added : ஜன 18, 2022
Advertisement
செங்கல்பட்டு--செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ., எனும் நிலை கண்காணிப்பாளர், சிவங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அதிருப்தி

செங்கல்பட்டு--செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ., எனும் நிலை கண்காணிப்பாளர், சிவங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் அனைத்து சங்கங்கள் சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரிந்த ஆர்.எம்.ஓ., பணியிட மாற்றத்தை ரத்து, ஊழியர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ளும், மருத்துவமனை முதல்வர் போக்கை கண்டித்து, செங்கல்பட்டில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில், 'மருத்துவமனை வளாகத்தில் சீரழிந்துள்ள சாலைகள் சீரமைக்க வேண்டும். கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள, மருத்துவமனையில் உள்ள ஆள்பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டும். 1,200 படுக்கைளுக்கு ஏற்ப, செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்' என, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X