கல்பாக்கம்-கல்பாக்கத்தில் அலுவலகம், பொது இடங்களில், அணுசக்தி துறையினர், கொரோனா தடுப்பூசி சான்று, அடையாள அட்டை வைத்திருக்க, நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் -- வசதிகள், பொதுத்துறையின் சென்னை அணுமின் நிலையம், பாவினி நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இவற்றின் ஊழியர்கள், கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.கொரோனா தொற்று தடுக்க, தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழுநாள் ஊரடங்கு என அமல்படுத்தும் நிலையில், இங்கும் இந்நடைமுறைகள், வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், துறை அலுவலகங்கள், நகரிய பொது இடங்கள் செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், தடுப்பூசி செலுத்திய சான்று, அடையாள அட்டை வைத்திருக்க, பொதுப்பணி சேவைகள் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவரவர் நிர்வாக அலுவலகங்களில், இம்மாதம் 31ம் தேதிக்குள் சான்றிதழ் அளிக்கவும் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE