சென்னை : வடலுார் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, மது கடைகளுக்கு, இன்று(ஜன.,18) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேலாளர்களை, 'டாஸ்மாக்' அறிவுறுத்திஉள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமையும், முழு ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்று கிழமையும் மது கடைகளுக்கு விடுமுறை. இதனால், பொங்கலன்று ஒரே நாளில் மட்டும், 317 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின.இரு நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டன. வடலுார் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, இன்று மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இதனால், நேற்றும் மது வகைகளை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், இன்று விடுமுறை தினத்தில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement