சென்னையில் திடீர் மழை; இன்றும், நாளையும் தொடரும்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022
Advertisement
சென்னை : சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று திடீரென மிதமான மழை பெய்தது. அதிகாலை துவங்கிய மழை பிற்பகல் வரை நீடித்தது. இன்றும், நாளையும் லேசான மழை தொடரும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் திடீர் மழை பெய்தது. லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை
Chennai,rain,சென்னை,மழை

சென்னை : சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று திடீரென மிதமான மழை பெய்தது. அதிகாலை துவங்கிய மழை பிற்பகல் வரை நீடித்தது. இன்றும், நாளையும் லேசான மழை தொடரும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் திடீர் மழை பெய்தது. லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர்ந்து பெய்ததால், சென்னையில் நேற்று முன்தினம் நிலவிய வெப்ப சூழல் மாறி, இதமான வானிலை நிலவியது.


latest tamil news


வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை, 29 டிகிரி செல்ஷியஸாக பதிவாகும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வரும், 19ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X