சிறாருக்கு மறுவாழ்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 18, 2022
Advertisement
புதுடில்லி : கொரோனாவால் பெற்றோரை இழந்து சாலைகளில் வசிக்கும் சிறார்களை அடையாளம் பார்த்து, காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறார்களின் மறுவாழ்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சுயமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையில் நேற்று
 சிறாருக்கு மறுவாழ்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி : கொரோனாவால் பெற்றோரை இழந்து சாலைகளில் வசிக்கும் சிறார்களை அடையாளம் பார்த்து, காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறார்களின் மறுவாழ்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சுயமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையில் நேற்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:கொரோனா மூன்றாவது அலையில் நாடு சிக்கி உள்ளது. இந்நிலையில் பெற்றோர் அல்லது அவர்களில் ஒருவரை இழந்து தற்போதைய கடுமையான குளிர்காலத்தில் சாலையோரம் வசிக்கும் அனாதை சிறார்களின் நிலை கவலை அளிக்கிறது.

அவர்களது மறுவாழ்வு தொடர்பாக இந்த அமர்வு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உடனடியாக பின்பற்றும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.கலெக்டர், போலீஸ், மாவட்ட சட்ட சேவை ஆணையம், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து சாலையோரம் வசிக்கும் அனாதை சிறார்களை அடையாளம் பார்த்து காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பணிகள் குறித்த விபரங்களை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் வலைதளத்தில் உடனடியாக பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X