பிரதமர் மோடிக்காக இன்று சத்ருசம்ஹார யாகம்

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (7)
Advertisement
சென்னை : பிரதமர் நரேந்திர மோடிக்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் - தமிழகம் சார்பில், இன்று சத்ருசம்ஹார யாகம் மற்றும் மிருத்யுஞ்யாகம், சென்னை தி.நகரில் நடத்தப்படுகிறது.இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழக நிறுவனர் எஸ்.வேதாந்தம் அறிக்கை:அண்மை காலமாக பிரதமருக்கு எதிராக நடக்கும் சதிகள், ஏற்கனவே நடந்திருக்கும் சம்பவங்கள், நம் மனதில் கலக்கத்தை கொடுத்து, தெய்வத்தின் அருள்
PM Modi, Modi,

சென்னை : பிரதமர் நரேந்திர மோடிக்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் - தமிழகம் சார்பில், இன்று சத்ருசம்ஹார யாகம் மற்றும் மிருத்யுஞ்யாகம், சென்னை தி.நகரில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழக நிறுவனர் எஸ்.வேதாந்தம் அறிக்கை:அண்மை காலமாக பிரதமருக்கு எதிராக நடக்கும் சதிகள், ஏற்கனவே நடந்திருக்கும் சம்பவங்கள், நம் மனதில் கலக்கத்தை கொடுத்து, தெய்வத்தின் அருள் வேண்டி நம் மனதை உருகிட வைத்துள்ளன.


அதிர்ச்சி


பஞ்சாப் மாநிலத்தில், ஒரு மேம்பாலத்தில் பிரதமரை, 20 நிமிடங்கள் காத்திருக்க வைத்த போராட்டமும், இப்போது விசாரணை அமைப்புகளையும், உச்ச நீதிமன்றத்தையும் பயங்கரவாதிகள் மிரட்டுவதும், நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்த்துகின்றன. இத்தகைய சூழலில் நாம் பகை வெல்லும் திறன் இருந்தும், படைத்தவனின் அருள் வேண்டி, பிரதமர் மோடிக்காக பிரார்த்தனை செய்வதும், யாகம் செய்வதும் கடமையாகிறது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், இன்று காலை 7:00 மணிக்கு, சென்னை தி.நகரில் உள்ள அலுவலக வளாகத்தில், சத்ருசம்ஹார யாகம் மற்றும் மிருத்யுஞ் யாகம் நடத்த உள்ளோம். அக்கறைசிறந்த வேதவிற்பன்னர்கள் இந்த யாகத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மீது அக்கறையும், அன்பும் கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr SS - Chennai,இந்தியா
19-ஜன-202200:50:51 IST Report Abuse
Dr SS இதெல்லாம் ஒரு செய்தி.
Rate this:
Cancel
Radhakrishnan - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-202214:37:50 IST Report Abuse
Radhakrishnan உலக அளவில் இந்தியா இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது அதனால் நம்மிடையே சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமை வேண்டும். அதனால் இந்த யாகம் இந்தியாவுக்கும் இந்து மக்களுக்கும் வெற்றியை தரும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறோம். வாழ்க இந்தியா வளர்க இந்திய ஒற்றுமை.
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
18-ஜன-202209:28:47 IST Report Abuse
Jit Onet தனது திறமை, மனவலிமை, பாரதிய கலாசாரம் இவற்றால் இந்தியாவை இடங்களில் இருந்து மீட்டு, மக்களின் நிலைமை மென்மேலும் உயர அயராது உழைக்கும் மஹான் திரு நரேந்திர மோடிக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யம் வெற்றிகள் தழைக்க ஸ்ரீகார்த்திகேய முருகப்பெருமானை வணங்குவதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X