சீக்ரெட் சிங்காரம்..

Added : ஜன 18, 2022
Advertisement
அரசியல் டப்பாங்குத்து!கை கட்சிக்குள் உள்ள சி.எம்., வேட்பாளர்களை கதி கலங்க வைக்க பாதயாத்திரை விவகாரத்தை கையில் எடுத்தார் மாநில தலைவரு. அவர் எதிர்பார்த்தபடி, அவரோட உட்கட்சிக்குள்ளேயும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனா, பாதயாத்திரை பாதியில முடக்கிடுச்சி.பாதயாத்திரையை சக்சஸ் செய்ய விடாமல் தடுத்த பூக்கார தலைவர்களுக்கு எதிராக தமது முழு செல்வாக்கை காட்ட, 'பிளான்'

அரசியல் டப்பாங்குத்து!கை கட்சிக்குள் உள்ள சி.எம்., வேட்பாளர்களை கதி கலங்க வைக்க பாதயாத்திரை விவகாரத்தை கையில் எடுத்தார் மாநில தலைவரு. அவர் எதிர்பார்த்தபடி, அவரோட உட்கட்சிக்குள்ளேயும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனா, பாதயாத்திரை பாதியில முடக்கிடுச்சி.பாதயாத்திரையை சக்சஸ் செய்ய விடாமல் தடுத்த பூக்கார தலைவர்களுக்கு எதிராக தமது முழு செல்வாக்கை காட்ட, 'பிளான்' செய்திருக்காராம். ஆளுங்கட்சிக்கு துணைப் போன அதிகாரிகளின் லிஸ்ட்டையும் சேகரித்துள்ளார்.இவர்களுக்கும் வேற மாதிரி தொல்லை கொடுக்க இப்போதே ரூட் தயார் செய்திட்டாராம். இவரின் ரோஷமான அரசியல் டப்பாங்குத்தை 2023ல பார்க்கலாமாம். இதை கசிய விடாமல் ரகசியமா வச்சிருக்காராம்!மொட்டு விரியுமா?சென்னப்பட்டணாகாரருக்கு மினிஸ்டர் பதவி பறி போனதும், அவரு கையை பிடிக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பா பேசினாங்க. இவரும் ஒதுங்கியிருந்தாரு. அண்மையில் சி.எம்., பங்ஷனில் தலை காட்டினாரு. மீண்டும் தன்னோட தொகுதியில, பூவை மணக்க வைக்க போறாராம்.இந்த தொகுதியில் பூ, மொட்டாக தான் இருக்குதாம். இருந்தாலும், தன்னோட சுய சக்தியால், மொட்டை மலர வைக்கப்போறாராம். இப்பவே டானிக், மருந்து கொடுத்து ஒர்க் செய்றாராம். அதிருப்தியில் இருக்கிற சில கட்சிக்காரர்களை தம் பக்கம் வளைத்து போட ஆரம்பிச்சிட்டாராம்!முதியவரின் திடீர் முடிவு!கை காரங்க பாதயாத்திரை துவங்குவதற்கு முன், புல்லு கட்டுக் காரங்க, 'ஜனதா ஜலதாரே' ரத யாத்திரை நடத்த திட்டம் தீட்டினாங்க. துவங்க நாள், நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தாங்க. 'தை' பொறக்கட்டுமுன்னு காத்திருந்தாங்க. அதற்குள்ளாக, அவங்க முந்திகிட்டாங்க. ரத யாத்திரை இப்போதைக்கு வேணாம்னு முதியவரு முடிவெடுத்துட்டாராம்!சட்டம் கடமையை செய்யுமா?முன்பெல்லாம் சட்டம் போட்டால் அதை கேள்வி கேட்காமல் பொதுமக்கள் ஏத்துக்குவாங்க. காக்கி காரங்க அபராதம் விதித்தால் மறுப்பே இல்லாமல் செலுத்தினாங்க. இப்போ என்னடான்னா, வியாக்யானம் பேசுறாங்க.அரசியல் தலைவருங்க சட்டத்தை மீறுறாங்க; அவங்கள உங்க சட்டம் ஒண்ணுமே செய்றதில்ல என ஆயிரம் கேள்வி கேக்கிறாங்க. அரசியல் தலைவர்கள் சட்டத்தை மதிக்க, அவங்களுக்கு புதுசா சட்டம் போட்டு புத்தியை புகட்டனும்னு காக்கி ஆபிசர்கள் பேசிக்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X