சென்னை : 'மதக் கலவரத்தை துாண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியிடும் 'யு டியூப் சேனல்' நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சமூக வலைதளமான 'யு டியூப்'பில் 'U2brutus' என்ற பெயரில் சேனல் நடத்தி வருபவர்கள் ஹிந்து மத வேதத்தில் ஆபாசம் நிறைந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் குறித்து பேசும் பிரகாஷ் என்பவர் ஹிந்து மக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்பதே வீடியோ வெளியிடுபவர்களின் நோக்கமாக உள்ளது.
உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்க சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடும்யூ டியூப் சேனலை முடக்க வேண்டும்.அவற்றை கையாளும் நபர்கள் உரிமையாளர்கள் பிரகாஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில்கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE