திருப்புவனம் : கீழடி அகழாய்வு தளங்களுக்குள் பார்வையாளர்கள் நேற்று முதல் அனுமதிக்கப்படவில்லை.கீழடி, அகரம் கொந்தகை, மணலுார் உள்ளிட்ட இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்தது. உறை கிணறுகள், சிவப்பு நிற பானை, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன..
கீழடியில் அகழாய்வு குழிகள் மூடப்படாமல் பார்வையாளர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது. தொல்லியல் துறை சார்பில் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பார்வையாளர்கள் குழிகளுக்குள் குழந்தைகளுடன் இறங்கி செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பொருட்கள் சேதமடைவதாக தினமலர் நாளிதழில்படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து பார்வையாளர்கள் குழிகளுக்கு அருகில் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பிற்கு ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் வெளியிேலயே அகழாய்வு தளத்தை கண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE