2,674 கோடி ரூபாய் சொத்து வரி; மாநகராட்சி புத்துணர்ச்சி

Added : ஜன 18, 2022
Advertisement
பெங்களூரு-கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் ஆர்ப்பாட்டத்துக்கு இடையிலும், பெங்களூரு மக்கள் 2,674 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த மாநகராட்சி புத்துணர்ச்சி அடைந்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி, பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. மாநகராட்சியின் பொருளாதார வளர்ச்சியில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது.

பெங்களூரு-கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையின் ஆர்ப்பாட்டத்துக்கு இடையிலும், பெங்களூரு மக்கள் 2,674 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த மாநகராட்சி புத்துணர்ச்சி அடைந்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி, பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. மாநகராட்சியின் பொருளாதார வளர்ச்சியில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. பலரும் கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வரி இலக்கை எட்ட முடியவில்லை.நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில், 3.500 கோடி ரூபாய் வரி வருவாய் இலக்கு நிர்ணயித்தது. அதன்பின் அரசின் உத்தரவுபடி 4,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.கொரோனா பரவுவது, ஊரடங்கு என பல காரணங்களால், சொத்து வரி எதிர்ப்பார்த்த அளவில் வசூலாவது கஷ்டம் என மாநகராட்சி அஞ்சியது. ஆனால் வரி வசூல், எதிர்ப்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.பொருளாதார நெருக்கடியில் துவண்டிருந்த மாநகராட்சி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஜனவரி 12 வரை, 2,674 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ஆன்லைன் மூலம், 1,405.33 கோடி ரூபாய்; வங்கி செலான் மூலம் 1,225.80 கோடி ரூபாய்; நேரடியாக 43 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தினர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா பரவுவதற்கு முன் 2019 -- 20ல் 2,681 கோடி ரூபாய்; 2020 -- 21ல் 2,777 கோடி ரூபாய் மாநகராட்சி கருவூலத்தில் சேர்ந்தது.நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இரண்டரை மாதம் பாக்கியுள்ள நிலையில் 2,674 கோடி ரூபாய் வசூலித்து, 67 சதவீதம் சாதனை செய்துள்ளது. மாநகராட்சியின் வருவாய்ப்பிரிவு அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகளால் இந்த சாதனையை செய்ய முடிந்தது.வரி பாக்கி வைத்துள்ள சொத்துதாரர்களுக்கு தொடர்ந்து, 'நோட்டீஸ்' அனுப்புகிறோம். அசையும் சொத்துகளை முடக்குவதாக எச்சரித்த பின், வரி வசூல் அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக 33 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள, மந்த்ரி மாலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X