பெங்களூரு-முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்று, வரும் 28ல், ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. கொரோனா மூன்றாவது அலைக்கு நடுவிலும், சில புதிய திட்டங்களை அறிவிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார்.கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்த பின், பசவராஜ் பொம்மை முதல்வர் பதவியில் அமர்ந்தார். அவர் பதவிக்கு வந்து, வரும் 28ல் ஆறு மாதம் நிறைவடைகிறது. இதை நினைவு கூறும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.பெங்களூரு விதான்சவுதாவின், 'பாங்கட்' ஹாலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது, முதல்வருக்கு நெருக்கமானவர்களின் விருப்பம். ஒருவேளை கொரோனா தீவிரமடைந்தால் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருக்காது.கொரோனாவால் வரி சேகரிப்பு இலக்கை எட்ட முடியாததால் புதிய திட்டங்களை அறிவிப்பதா அல்லது 2022 -- 23ன் பட்ஜெட்டில் அறிவிப்பதா என முதல்வர் குழப்பமடைவதாக கூறப்படுகிறது.முதல்வர் பசவராஜ் பொம்மை ஆறு மாத பதவியை நிறைவு செய்வதையொட்டி சாதனை அறிக்கை வெளியிட முதல்வர் அலுவலகம் தயாராகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE