வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''கொரோனா தடுப்பூசி தொடர்பாக, மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:நாட்டில் ஒரே ஆண்டில் 157 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், இந்தியா உலகிற்கே வழிகாட்டியாய் திகழ்கிறது. இதற்கு, பிரதமர் மோடியே காரணம்.தடுப்பூசி செலுத்தியதால் தான், தொற்றுகள் அதிகரித்திருந்தாலும் கூட உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது போல் பிரசாரம் செய்தது. இதுவரை தமிழகத்தில் 8.98 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.க.,வினர் என்ன பதில் சொல்ல போகின்றனர்?
துாத்துக்குடியைச் சேர்ந்த மோகன் லாசரஸ் என்பவர், கிறிஸ்துவ மக்களிடம் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்றும், செலுத்தினால் பல பிரச்னைகள் உருவாகும் என்றும் தவறாக வதந்தி பரப்புகிறார். தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக, மக்களை துாண்டி விடும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
மதத்தின் பெயரால் வதந்தி பரப்புவது உயிரை பலி கொடுப்பதற்கு சமம். எனவே, வதந்தி பரப்புவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE