பெங்களூரு-கர்நாடகாவில் 2023 ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., - எம்.பி.,க்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு உயிரூட்டும் வகையிலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகிப்பது குறித்தும் ம.ஜ.த.,வினர், 'ஜனதா ஜலதாரே' எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, வரும் 26, குடியரசு தினத்தன்று மாநிலத்தின் அனைத்து நதிகளிலிருந்தும் தண்ணீர் சேகரிக்கும் நிகழ்ச்சி மேற்கொள்கின்றனர்.இது குறித்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் இன்று காலை பெங்களூரு சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.இதே வேளையில், 2023ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., - எம்.பி.,க்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE