பெங்களூரு-''பெங்களூரில் இதுவரை 738 போலீசார் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். தங்களின் ஆரோக்கியத்தை பற்றி, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவுறுத்தினார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:போலீஸ் நிலையத்துக்கு வெளியே பணியாற்றும் போலீசார், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மகளிர் போலீசாருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்பட்டால் பணிக்கு வராமல் வீட்டில் ஓய்வு பெற வேண்டும்.சூழ்நிலைக்கு தகுந்தபடி, போலீசாரின் ஆரோக்கியத்தில், உயர் அதிகாரிகள் அக்கறை காண்பிக்க வேண்டும். மூத்த உதவி சப் --- இன்ஸ்பெக்டர்களும், போலீஸ் நிலையங்களிலேயே பணியாற்ற வேண்டும்.மூத்த போலீசாரை தவிர ஹொய்சாளா ரோந்து, சீட்டா ரோந்து பணிகளுக்கு இளம் போலீசார் செல்ல வேண்டும்.அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும். 'பேஸ் ஷீல்டு' முக கவசம் அணிவது கட்டாயம்.போலீசாருக்கு தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; சிகிச்சை பெற வேண்டும். இன்ஸ்பெக்டர்கள், டி.சி.பி.,க்கள் தொற்று ஏற்பட்ட போலீசார் மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க வேண்டும்.தற்போதைக்கு எந்த வழக்கின் விசாரணைக்காகவும் போலீசார் வெளி மாநிலத்துக்கு செல்லக்கூடாது. பெங்களூரில் இதுவரை 738 போலீசார் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். தங்களின் ஆரோக்கியத்தை பற்றி, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE