திருப்புவனத்தில் மணல் திருட்டு பள்ளமாகி போன வைகை ஆறு

Added : ஜன 18, 2022
Advertisement
திருப்புவனம் : திருப்புவனத்தில் தொடர் மணல் திருட்டால் வைகை ஆறு பள்ளமாகி கட்டாந்தரையாக மாறி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மதுரை நகருக்கு மணல் கடத்தப்படுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள அதிகரை, அங்காடிமங்கலம், மணல்மேடு, பெத்தானேந்தல், லாடனேந்தல், இந்திராநகர் ஒத்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் மணல்
 திருப்புவனத்தில் மணல் திருட்டு  பள்ளமாகி போன வைகை ஆறு

திருப்புவனம் : திருப்புவனத்தில் தொடர் மணல் திருட்டால் வைகை ஆறு பள்ளமாகி கட்டாந்தரையாக மாறி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மதுரை நகருக்கு மணல் கடத்தப்படுகிறது.

ஆற்றங்கரையோரம் உள்ள அதிகரை, அங்காடிமங்கலம், மணல்மேடு, பெத்தானேந்தல், லாடனேந்தல், இந்திராநகர் ஒத்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வீடுகள், தோட்டங்கள், தென்னந்தோப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டு பகல் நேரங்களில் ஜல்லி, கூரை ஓடு, கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் அடியில் வைத்து மணல் கடத்தப்படுகிறது.ஆற்றை ஒட்டிய கிராமங்களில் குறைந்த பட்சம் ஒவ்வொரு கிராமத்திலும் இயந்திரம், டிராக்டர், டிப்பர் லாரி 5 க்கும் மேற்பட்டவைகள் உள்ளன.

அதிகாரிகளை சரிகட்டி மணல் கடத்துவதால் வைகை ஆற்றில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாக அதிகளவு மணல் சேர்ந்திருப்பதால் மணல் கடத்தல் வெகு ஜோராக நடந்து வருகிறது. திருப்புவனம் பாக்யாநகரை ஒட்டி தலைச்சுமையாக தினசரி 50க்கும் மேற்பட்டோர் சங்கிலி தொடர் போல நின்று மணல் கடத்துகின்றனர். கிருதுமால் நதி , கண்மாய் புறம்போக்கு உள்ளிட்ட பகுதிகளான பொட்டப்பாளையம், கரிசல்குளம், பழையனூர் , அச்சங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் கடத்தல் நடந்து வருகிறது. தமிழக அரசு மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X