சென்னை : எம்.ஜி.ஆரின் ௧௦௫வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும்அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் ௧௦௫வது பிறந்த நாள், நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கொட்டும் மழையில் நனைந்தபடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., கொடியை ஏற்றி, அங்கு திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கினர். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்ர்கள் பொன்னையன், ஜெயகுமார், வைகைச்செல்வன், கோகுலஇந்திரா பங்கேற்றனர். முன்னதாக, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினகரன் மரியாதை
விழுப்புரம் மாவட்டம், பொம்மையார் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.ம.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு துணைப் பொதுச் செயலர் செந்தமிழன், மாநில நிர்வாகி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலர் ராமஜெயம் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE