சென்னை : புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
தமிழக அரசு சார்பில், சென்னை பெரும்பாக்கத்தில் 16.8 ஏக்கர் நிலம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 24.65 கோடி ரூபாய்இங்கு 24.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, 12ம் தேதி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.நான்கு தளங்களாக இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தரை தளத்தில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான நுால்களை கொண்ட நுாலகம், திருவள்ளுவர் அரங்கம், தொல்காப்பியர் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தளத்தில் கல்விசார் பணியாளர் அறைகள், அலுவலகம், இயக்குனர், பதிவாளர், நிதி அலுவலர் அறைகள் உள்ளன. இரண்டாம் தளத்தில், மின் நுாலகம், காட்சி வழி கற்பித்தல் அரங்கு, வலையொளி அரங்கு உள்ளிட்டவை உள்ளன.மூன்றாம் தளத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் வசதிகள் செய்யப்பட உள்ளன. இந்த செம்மொழி தமிழாய்வு நிறுவன செயல்பாடுகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
பழமையான நுால்கள்அங்குள்ள பழமையான நுால்கள், செவ்வியல் நுால்களின் மின்படியாக்கம் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அப்போது செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரை நெறி, ஐங்குறுநுாறு குறிஞ்சி, ஐங்குறுநுாறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டு கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு உள்ளிட்ட எட்டு புதிய நுால்களை, முதல்வர் வெளியிட்டார்.
இவற்றை, தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். அப்போது, தமிழ் வளர்ச்சி துறை செயலர் மகேசன் காசிராஜன், தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர் ஜெயசீலன், செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE