சென்னை : மாற்று திறனாளி உயிரிழந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்தவர் குமார்; நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளர் வீட்டில், தங்க நகைகளை திருடியதற்காக, சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மாற்று திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோர் சேந்தமங்கலம் போலீசாரால், 11ம் தேதி கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாற்று திறனாளி பிரபாகரன், 12ம் தேதி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு 11:40 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் ஆகியோரை, சேலம் சரக டி.ஐ.ஜி., தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின், மாற்று திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். பிரபாகரன் உயிரிழந்த வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE