சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல், மழை நிலவர கண்காணிப்பு இயக்குனராக, செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது. இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வானிலை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மையத்தின் கீழ் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், அமராவதி, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில், மாநில ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன.
'கிளைமட்டாலஜி'இந்நிலையில், சென்னையில் உள்ள தென் மண்டல ஆய்வு மையத்தின் தலைவராக பாலசந்திரன் பதவி வகிக்கிறார். அவரது தலைமையின் கீழ், பல்வேறு துறைகளுக்கான இயக்குனர்கள் செயல்படுகின்றனர். அவர்களில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் மற்றும் மழை நிலவர ஆய்வு பிரிவின் இயக்குனராக புவியரசன் பணியாற்றி வந்தார்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்த புவியரசன், நேற்று துறை மாற்றப்பட்டார். 'கிளைமட்டாலஜி' என்று கூறப்படும், தட்ப வெப்பநிலை புள்ளி விபர பிரிவின் இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'வாட்ஸ் ஆப்' குழுஅவர் பணியாற்றிய பிரிவுக்கு, செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல தலைவர் மற்றும் இயக்குனர்கள் அனைவரும், புவி ஆய்வு விஞ்ஞானிகள் ஆவர்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலசந்திரன், இயக்குனர் புவியரசன் ஆகியோர் இணைந்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை தொடர்பான அறிவிப்புகளில், பெரும் சீர்திருத்தங்களை ஏற்படுத்திஉள்ளனர்.
ஊடகங்கள் வழியாக புயல் மற்றும் மழை விபரங்களை, தற்போதைய தொழில்நுட்ப அடிப்படையில் விரைவாக வழங்கி வந்தனர். வானிலை ஆய்வு மைய இணையதளம் சீரமைக்கப்பட்டு, அனைத்து விபரங்களும் தினமும் புதுப்பிக்கப்படுகின்றன.இயக்குனர் புவியரசன் பதவியேற்ற பின், வானிலை ஆய்வு மையத்தின் ஊடக மற்றும் அரசு துறை தகவல்களுக்காக, தனியாக 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கப்பட்டது. வானிலை அறிவிப்புகள், ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE