சென்னை : கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததற்காக, இந்திய அணு மின் கழகத்திற்கு, தமிழக மின் வாரியம், 1,343 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், மத்திய அரசின் இந்திய அணு மின் கழகத்திற்கு சொந்தமான அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 1,000 மெகா வாட் திறன் உடைய, இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 1,152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மொத்த மின் தேவையை பூர்த்தி செய்வதில், கூடங்குளம் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு யூனிட் மின் கொள்முதல் விலை 4 ரூபாய்க்கு கீழ் உள்ளது.மின் கொள்முதல் செய்வதற்கான பணத்தை, மின் வாரியம் குறித்த காலத்திற்குள் வழங்குவதுஇல்லை. அதன்படி, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக, 2021 டிசம்பர் நிலவரப்படி மின் வாரியம், 1,343 கோடி ரூபாய் நிலுவை வைத்து உள்ளது. இது, மின்சாரம் வாங்கி 60 நாட்களுக்கு மேலாக வைத்துள்ள நிலுவை தொகை.
துாத்துக்குடியில் மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து என்.டி.பி.எல்., என்ற கூட்டு நிறுவனம் வாயிலாக தலா 500 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.அங்கிருந்து தமிழகத்திற்கு தினமும் 410 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்.டி.பி.எல்., மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக, இம்மாதம் 12ம் தேதி நிலவரப்படி, 150 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இது, மின்சாரம் வாங்கி, 45 நாட்களுக்கு மேலான நிலுவை தொகையாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE