மாணவர்களுக்கு தான் 'லீவ்'; ஆசிரியர்களுக்கு இல்லை

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: 'பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 'ஆன்லைன்' வழி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, ஆசிரியர்களுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, அனைத்து
School Leave, Students, Teachers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 'ஆன்லைன்' வழி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, ஆசிரியர்களுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும், கல்வி தொலைக்காட்சி வழியே மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், 'வாட்ஸ் ஆப்' மற்றும் பல்வேறு செயலிகள் வழியே வகுப்புகள் நடத்த வேண்டும்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை கவனிக்கும் வகையில், தினமும் வர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்ற காரணத்தால், ஆசிரியர்களும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது. பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


latest tamil news
இடமாறுதல் கவுன்சிலிங்


தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கவுன்சிலிங்கை நடத்த உத்தரவிட்டது. இதன்படி, கவுன்சிலிங் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

விருப்பம் உள்ள ஆசிரியர்களிடம், 'ஆன்லைன்' வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 12ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. நாளை கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்க உள்ளன. விண்ணப்ப பதிவு செய்த ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. இதில் ஆட்சேபனைகள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படும்.

அதன்பின், அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், 24ம் தேதி துவங்குகிறது. இவ்வாறு படிப்படியாக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு, பிப்ரவரி 23ல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் முடிவடையும் என பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-202215:48:12 IST Report Abuse
Bhaskaran Moonru varusam aaga vetti sambalam kadavuluke adukaathu
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
18-ஜன-202211:36:47 IST Report Abuse
தத்வமசி யாரும் இல்லாத கடையில் யாருக்காக காபி ஆத்தப் போகிறார்கள் இவர்கள்? ஒன்றாம் தேதி ஆனால் கிடைக்கும் சம்பளத்தில் குறியாக இருக்கும் இவர்கள் தங்களின் தொழிலுக்கு உண்மையாக இருக்கிறார்களா? தனியார் பள்ளிகளையும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவு போட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-ஜன-202211:33:46 IST Report Abuse
Apposthalan samlin நம்ம கல்வித்துறை மிக மிக மோசம். ஆசிரியர்கள் மூன்று வருடம் சும்மா உட்காந்து லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இன்னைக்கு ஆசிரியர்கள் கோடீஸ்வரர்கள் இன்னும் அவர்களுக்கு சம்பளம் பதவில்லையாம். அரசு இதை ஏன் கவனத்தில் எடுத்து கொள்ள மாட்டேன்கிறது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் பிள்ளைகளை விட ஆசிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ஏன் அந்த பள்ளிகளை மூட மாட்டேன்கிறேர்கள்? மூன்று ஆசிரியர் ரெண்டு பிள்ளைகள் எதனை பள்ளிகள் இருக்கின்றன? இதை கொஞ்சம் கவனித்தால் அரசு நிதி விரயமாகாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X