பல இடங்களில் அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

Added : ஜன 18, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க., வினர் கொண்டாடினர். பல இடங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 105 வது ஆண்டு பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பார்க் ரோட்டில் அமைந்துள்ளஎம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை
 பல இடங்களில் அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

திருப்பூர்:திருப்பூரில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க., வினர் கொண்டாடினர். பல இடங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 105 வது ஆண்டு பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பார்க் ரோட்டில் அமைந்துள்ளஎம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலு, தம்பி மனோகரன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் முருகேசன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளர் தலைமையில், கே.வி.ஆர்., நகர் மைதானம், செல்லம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாநகராட்சி, 28வது வார்டில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அவைத்தலைவர் நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி, பொருளாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 30வது வார்டு போயம் பாளையத்தில் நடந்த விழாவிற்கு முன்னாள் கவுன்சிலர் சபரீஸ்வரன், தலைமை வகித்தார். 14வது வார்டு சிறுபூலுவப்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது; வார்டு செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அங்கேரிபாளையம் பகுதி கழகம் சார்பில் நடந்த விழாவில்எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நகராட்சி முதல் மண்டல முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் மணி, வார்டு செயலாளர் சேதுமாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாநகர் மாவட்ட விவசாய அணி பிரிவு சார்பில், கோல்டன் நகர், டி.எம்.எஸ்., நகர், அருள் ஜோதி நகர், ராணிமங்கம்மாள் நகர், முருகசாமி லே அவுட் உள்ளிட்ட 15 இடங்களில் நடந்த விழாவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, தலைமை வகித்தார். கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், வார்டு செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X