சித்துார் : ஆந்திராவில், கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பலி கொடுக்கும் போது எதிர்பாராத விதமாக, ஆடுக்கு பதிலாக, அதை பிடித்திருந்தவரின் தலை வெட்டப்பட்டது.
ஆந்திராவில், சித்துார் மாவட்டம் வலசப்பள்ளி கிராமத்தில் மகர சங்கராந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் எல்லம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக நேர்ந்து இருந்த ஆடு மற்றும் கோழிகளை கோவில் வளாகத்தில் பலி கொடுக்கும் நிகழ்ச்சி மாலையில் துவங்கியது.
சலபதி என்பவர், ஆடுகளை ஒவ்வொன்றாக வெட்டத் துவங்கினார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தார்.நேர்த்திக்கடன் செலுத்தும் ஒவ்வொருவரும் வரிசையாக தங்கள் ஆடுகளை அழைத்து வந்தனர். சலபதி அவற்றின் தலையை வெட்டித் தள்ளினார். நள்ளிரவிலும் இந்த நிகழ்வு தொடர்ந்தது.
அப்போது பலி ஆட்டை பிடித்திருந்த சுரேஷ், 35, என்பவரது தலையை, ஆடு என தவறாக நினைத்து, சலபதி ஓங்கி வெட்டினார். தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சுரேஷ் இறந்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE