ஆன்லைனில் உறவினர்களிடம் பேசும் கைதிகள்: மத்திய அரசின் 'இ-பிரிசன்ஸ் சாப்ட்வேர்' பயன்பாடு அதிகரிப்பு!

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | |
Advertisement
கோவை: கொரோனா பரவலால், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறையில் உள்ள கைதிகள், உறவினர்களிடம் பேச, மத்திய அரசின் 'இ-பிரிசன்ஸ்' சாப்ட்வேர் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என, 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40 பெண் கைதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கொரோனா பரவலால், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், சிறையில் உள்ள கைதிகள், உறவினர்களிடம் பேச, மத்திய அரசின் 'இ-பிரிசன்ஸ்' சாப்ட்வேர் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என, 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி வழங்குகிறது.



latest tamil news




தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழக்கிழமைகளிலும், விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் உறவினர்கள் சந்தித்து பேசலாம். கடந்த, 2020ல் கொரோனா பரவல் காரணமாக சிறை கைதிகளை உறவினர்கள் நேரடியாக சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக, வாட்ஸ்ஆப் வீடியோ கால் அழைப்பு மூலம் கைதிகள் உறவினர்களுடன் பேச சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இச்சூழலில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சிறைகளில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் இ-பிரிசன்ஸ் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் முன்பதிவு செய்து ஆன்லைன் வழியாக உறவினர்கள், கைதிகளுடன் பேச வழிவகை செய்யப்படுகிறது. சராசரியாக தினமும், 30 கைதிகள் வரை இம்முறை மூலம் உறவினர்களுடன் பேசி வருவதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.'வாரம் ஒருமுறை பேச வாய்ப்பு'கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் கூறியதாவது:


latest tamil news



கைதிகளை சந்திக்க விண்ணப்பிக்கும் உறவினர்களிடம் மொபைல்போன் எண், இ-மெயில் முகவரி, ஆதார் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். கைதிகளின் உறவினர்கள் கம்ப்யூட்டர், மொபைல்போன்களில் கூகுள் க்ரோம் வழியாக இ-பிரிசன்ஸ் என்று டைப் செய்து நுழைய வேண்டும்.

அதில், 'emulakat' என்ற பதிவை தொட்டால் படிவம் வரும். அவர்களின் பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, சந்திக்க உள்ள கைதியின் பெயர், உறவு முறை, சந்திக்க உள்ள தேதி போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும். மொபைல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., பதிவு செய்ய வேண்டும்.

சிறைத்துறை நிர்வாகம் ஒப்புதல் அளித்ததும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் மெயில் முகவரிக்கு பிரத்யேக 'லிங்க்' அனுப்பப்படும். அதில் கைதியை சந்திக்கும் நேரம், தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த லிங்க்கை பயன்படுத்தி, உள்ளே சென்று குறிப்பிட்ட தேதி, நேரத்தில் 'வீடியோ' மூலம் கைதிகளை பார்த்து பேசலாம்.

ஒரு கைதிக்கு அதிகபட்சமாக, 30 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. ஒரு கைதி வாரத்துக்கு ஒரு முறை இம்முறையில் உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் இ-பிரிசன்ஸ் சாப்ட்வேர் மூலம் மத்திய சிறை, கிளை சிறைகளில் கைதிகள் பேசுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X