இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': போலி முத்திரை தயாரித்து மோசடி செய்தோர் மீது வழக்கு

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்புதை மணலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; அமராவதி ஆற்றில் விபரீதம்தாராபுரம் : தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்தபோது, புதைமணலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட, ஆறு பேர் பலியாகினர். திருப்பூர், இடுவாய், அண்ணாமலை கார்டனை சேர்ந்த, 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை, முனியப்பன் கோவிலுக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியில்தமிழக நிகழ்வுகள்
புதை மணலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; அமராவதி ஆற்றில் விபரீதம்தாராபுரம் : தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்தபோது, புதைமணலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட, ஆறு பேர் பலியாகினர்.latest tamil newsதிருப்பூர், இடுவாய், அண்ணாமலை கார்டனை சேர்ந்த, 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை, முனியப்பன் கோவிலுக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.அங்கிருந்து, திருப்பூருக்கு கார் மற்றும் வேனில் நேற்று திரும்பினர். மாலை 4:00 மணிக்கு, தாராபுரம் அருகே, பைபாஸ் சாலையை ஒட்டி, அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, அபாயகரமான புதைமணல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது, சிலர் திடீரென புதைமணலில் சிக்கினர்.

அவர்கள் கூச்சலிட்டதை கேட்டு, அப்பகுதியில் இருந்த சிலர் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மீட்பு முயற்சி தோல்வி அடைந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த, சகோதரர்கள் ரஞ்சித், 19 - ஸ்ரீதர், 17 மற்றொரு சகோதரர்கள் யுவன்,17 - மோகன், 18 மற்றும் சக்ரவர்மன், 18; அமிர்தகிருஷ்ணன், 17, என ஆறு பேர் பலியாகினர். இதில் ரஞ்சித் மட்டும் கல்லுாரி மாணவர்; மற்ற அனைவரும், பள்ளி மாணவர்கள். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, ஆறு பேரின் உடல்களையும் மீட்டனர்.

அமராவதி ஆற்றில் புதைமணல் உள்ள பகுதி குறித்து, எச்சரிக்கும் பலகை இருந்தது. ஆனால், புதிய பாலம் கட்டுமான பணியின் போது, பலகை அகற்றப்பட்டது. இதனால், வெளியூரை சேர்ந்தவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது, புதை மணல் இருப்பது தெரியாமல் சிக்கி விடுகின்றனர். இதே இடத்தில் ஏற்கனவே, 10க்கும் மேற்பட்டோர் புதை மணலில் சிக்கி பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசு ஊழியர் உடல் மெரினாவில் மீட்புமெரினா- -மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிகுப்பம் கடற்கரை மணல் பரப்பில், நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


latest tamil news


மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், சடலமாக கிடந்தவர் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன், 35, என்பதும், நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ஜெகதீசன் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலிவேலுார், : வேலுார் அருகே நடந்த எருது விடும் விழாவில், மாடு முட்டி முதியவர் உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டம் லத்தேரி அருகே, கீழ்முட்டுகூர் பகுதியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றதால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது. விழா முடியும் போது, திடீரென பாய்ந்து வந்த மாடு முட்டி தள்ளியதில், லத்தேரி எஸ்.ஐ., சுப்பிரமணி, 50, படுகாயம்அடைந்தார்.

கீழ் அரசம்பட்டு கிராமத்தில் நடந்த மாடுபிடி திருவிழாவை வேடிக்கை பார்த்த, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நெசல் புதுப்பேட்டையை சேர்ந்த நாமதேவன், 60, என்பவரை மாடு முட்டியது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


போலி முத்திரை தயாரித்து மோசடி செய்தோர் மீது வழக்குகோவை : போலி முத்திரை, ரசீது தயாரித்து, அதன் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் இருவருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsகோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், உதவி வருவாய் அலுவலராக சத்யபிரபா, பில் கலெக்டராக யுவராஜ் பணியாற்றியபோது, விதிமீறல் கட்டடங்களுக்கு, வரி விதிப்புதாரர்களிடம் வசூலித்த பணத்தில், பல லட்சம் ரூபாயை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாநகராட்சி பெயரில், போலி முத்திரை, ரசீது பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து, 2020, செப்., 20ல் நம் நாளிதழில் இது குறித்த செய்தி வெளியானது. இதன் பின், பில் கலெக்டர் யுவராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். உதவி வருவாய் அலுவலர் சத்யபிரபா, பணியிடமாற்றம் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, இருவர் மீதும், 9 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது. இதில், 7 லட்சத்து, 57 ஆயிரத்து, 430 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை முடிந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

அரசு மருத்துவமனையில் புதைக்கப்பட்ட பெண் சிசுதர்மபுரி : தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பெண் சிசு புதைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள, பிரசவ வார்டின் பின் பகுதியில், மண்ணில் புதைத்திருந்த, 24 வார பெண் சிசுவின் உடலை, நாய் கவ்வி சென்றதை கண்டு, அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, வி.ஏ.ஓ., அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தர்மபுரி டவுன் போலீசார், சிசுவின் உடலை மீட்டனர். மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டோர் விபரங்களை சேகரித்து, சிசுவை புதைத்தது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தடுப்பணையில் மூழ்கி மூவர் பலிபெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் கிராமத்தில் உள்ள கல்லாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கன மழையால், இங்கு தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த ராமர், 47; அவரது மனைவி பத்மாவதி, 42; கல்லுாரி மாணவி லட்சுமி, 22; பள்ளி மாணவி சகுந்தலா, 16; ராதிகா 24 ஆகிய ஐந்து பேரும், நேற்று மதியம் கல்லாறு தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட சுழலில் பெண் ஒருவர் சிக்கியதால், அவரை காப்பாற்ற முயன்ற போது, நான்கு பெண்களும் தண்ணீரில் தத்தளித்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு, கரையில் சேர்த்தனர்.ஆனால், பத்மாவதி, லட்சுமி, சகுந்தலா ஆகிய மூவரும் மூச்சுத்திணறி இறந்தனர். ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


துாக்க மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புபேரூர்:காளம்பாளையத்தில், துாக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி மாலினி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்களது மகள் பிரியதர்ஷினி திருமணமாகி, கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த, 9ம் தேதி, பிரியதர்ஷினி வழக்கம்போல் தனது அம்மாவுக்கு போன் செய்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் மாலினி போனை எடுக்காததால், தந்தையிடம் தெரிவித்து, வீட்டுக்குச் சென்று பார்க்க கூறியுள்ளார்.ஹரிகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் திறக்காததால், அருகில் உள்ளவர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மாலினி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாலினிக்கு உடல் நலக்குறைவு உள்ளதால், பல மாத்திரைகளும், துாக்க மாத்திரையும் எடுத்துக் கொள்வது வழக்கம். சம்பவத்தன்று, கூடுதலாக துாக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சூழலில், மாலினி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்திய நிகழ்வுகள்
ஸோமட்டோ ஊழியர் சுட்டுக்கொலைரேவாரி : ஹரியானாவின் பல்வால் மாவட்டம் ஹுதிதால் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர சிங் 30. ஸோமட்டோ நிறுவன ஊழியர். அன்சால் நகர் 19வது செக்டாரில் நேற்றுமுன்தினம் இரவு உணவு வினியோகிக்க சென்ற போது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு பணப்பை, அலைபேசியை கொள்ளையடித்தனர்.

அவரை மகேந்திர சிங்கை போலீசார் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தீப்பிடித்து எரிந்த லாரிஅம்பிளிக்கை : கர்நாடகா மாரடிகள்ளியைச் சேர்ந்த ஜெகதீஷா 42. இவர் தனது லாரியில்தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார். கொசவபட்டி அருகே சென்றபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது.

ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் இருந்த ரூ.2.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைபுதுச்சேரி-திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேர வாணரப்பேட்டை ராஜராஜன் வீதியை சேர்ந்தவர் சத்தியராஜ்,36; கார் டிரைவர்.

இவரது தம்பி மகிமை தாஸ் (26). இவர் புஸ்சி வீதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 6ம் தேதி திருமணம் நடத்த, நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மகிமைதாசின் குடிபழக்கத்தை அண்ணன் சத்தியராஜ் கண்டித்து வந்தார்.நேற்று முன்தினம் போதையில் வந்ததை கண்டித்ததால் மனமுடைந்த மகிமைதாஸ் வீட்டில் துாக்குபோட்டுக் கொண்டார்.

அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல் துரத்திய ஊழியர் மீது சரமாரி தாக்குதல்வில்லியனுார்-வில்லியனுார் அருகே இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் தராமல் கும்பல் தப்பிச் சென்றது. துரத்தி சென்ற ஊழியரை தாக்கி, பைக்கையும் பறித்து சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், சுல்தான்பேட்டை பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த வினாயகம் மகன் ராஜ்குமார்(31), ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்தனர். இரு பைக்கிற்கும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் தனது பைக்கில் அவர்களை துரத்திச் சென்றார்.

வில்லியனுார் மூப்பனார் காம்ப்ளக்ஸ் அருகே அவர்களை தடுத்துநிறுத்திய ராஜ்குமாரை, மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி, அவரது பைக்கையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X