திருச்செங்கோடு : ''ஜெ., அரசு வீடுகளுக்கு வழங்கிய, 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் வகை யில், தி.மு.க.,வினர் மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளனர்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
திருச்செங்கோட்டில் அவர் கூறியதாவது:
ஜெ., அரசு வீடுகளுக்கு வழங்கிய, 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில், தி.மு.க.,வினர் மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளனர். இதுவரை மின்கட்டணம் செலுத்தாமல், சிக்கனமாக இலவசம் அளவுக்கு பயன்படுத்தியவர்களும், வரி கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், புதிய தேர் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் ரூபாய் இரண்டு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. தற்போதைய ஆட்சியில் தான் பணி நடப்பதாக, தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE