உலகுக்கு புதிய நம்பிக்கையை இந்தியா அளித்துள்ளது: பிரதமர் பெருமிதம்

Added : ஜன 18, 2022
Advertisement
புதுடில்லி : ''கொரோனா பரவலால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் 157 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக உலகுக்கு புதிய நம்பிக்கையை இந்தியா அளித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோசை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலக பொருளாதார
India,Modi,Narendra modi,இந்தியா,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : ''கொரோனா பரவலால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் 157 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக உலகுக்கு புதிய நம்பிக்கையை இந்தியா அளித்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோசை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இந்தாண்டு கூட்டம் நடக்கிறது.
இதில், உலகின் தற்போதைய நிலை என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

கொரோனா பரவலால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. நாட்டில் 157 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கை என்ற பூங்கொத்தை இந்தியா பரிசாக அளிக்கிறது.

அதில், ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை; 21ம் நூற்றாண்டை ஆளக்கூடிய தொழில்நுட்பம்; மிகச் சிறந்த இந்தியர்களின் திறன் போன்றவை அடங்கியுள்ளன.மருந்து தயாரிப்பில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கொரோனா காலத்தில் 'ஒரே உலகம், ஒரே சுகாதாரம்' என்ற கோஷத்துடன் உலக நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசி வழங்கி தன்னால் முடிந்த உதவியை இந்தியா செய்துள்ளது.

உலகின் எதிர்பார்ப்புகளை இந்தியா நிறைவேற்றி வருவதாக உலக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்தியாவில் கடந்தாண்டில் மட்டும் 60 ஆயிரம் புதிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளுக்கு புதுமையான கண்டுபிடிப்புகளை இந்தியா அளித்து வருகிறது.

இவ்வளவு சிறப்புகள் உள்ளதால் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம். அதற்கான அனைத்து வாய்ப்புகளும், வசதிகளும் இங்கு உள்ளன. பூங்கொத்து கொடுத்து உலக நாடுகளை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சீன பிரதமர் ஷீ ஜிங்பிங் பேசினார். மோடியைத் தொடர்ந்து ஐ.நா., பொதுச் செயலர் அனடோனியோ கட்டரஸ் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பேசுகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X