நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் வந்திருந்த சமயத்தில்தான் இது நடந்தது. அரசப் பிரதிநிதியை கொல்வதற்கு முயற்சி செய்தார் என்று ஆங்கில அரசால் குற்றம் சாட்டப்பட்டு சீனாவிற்கு தப்பித்து வந்து அங்கிருந்து ஜப்பானுக்கு வந்தவர் ராஷ் பிகாரி போஸ். இவர் ஒரு வங்காளி. அங்கேயே ஒரு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிய குடியுரிமையும் பெற்றிருந்தார்.
அவர் ஏற்கனவே முதல் உலகப்போரின் போது ஜப்பான் கைது செய்து சிறை வைத்திருந்த கைதிகளை கொண்டு ஒரு படையை அமைக்க விரும்பினார். அவருக்கு ஜப்பான் அனுமதி அளித்திருந்தது. அதன்படி சிறையிலிருந்த கப்பற்படை தலைவர் மோகன் சிங்குடன் இணைந்து சிங்கப்பூரில் இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கினார்.
பின்னர் மோகன் சிங்கிற்கும் ஜப்பானுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அந்த அமைப்பை கலைத்து விடலாம் என்று முடிவு செய்து இந்த நேரத்தில்தான் நேதாஜி ஜப்பானுக்குப் போய் சேர்ந்தார். ஜப்பான் பிரதமர் டோஜாவை சந்தித்து பேசினார்.
வெளிநாட்டில் அமைக்கப்படும் இந்திய அரசை அங்கீகரிக்க வேண்டும். அதை ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்த வேண்டும். ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் புகுந்து கைப்பற்றும் அனைத்து பகுதிகளிலும் இந்திய தேசிய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை ஜப்பான் பிரதமரிடம் நேதாஜி வைத்தார்.
ஜப்பான் பிரதமர் இந்திய தேசிய ராணுவத்திற்கு தேவையான உதவிகள் செய்வதாக வாக்குறுதி அளித்தார். நேதாஜி ஜப்பானில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தையும் பார்வையிட்டார்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE