வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் பட்டினி சாவு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமுதாய உணவகங்களை அமைத்து பட்டினி சாவுகளை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உடல் உடற்கூறாய்வில் குடலில் உணவு இல்லாததால் பட்டினிசாவு என அழைக்கப்பட்டது. நாட்டில் பட்டினி சாவே இல்லை என எப்படி கூற முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE