ஈரோடு: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., 105வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., அலுவலகம் மற்றும் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் அமைச்சர் ராமசாமி, மாவட்ட மாணவரணி முருகானந்தம், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோபியில் கச்சேரிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில், கோபி சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி.,க்கள் சத்தியபாமா, காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நம்பியூர், டி.என்.,பாளையம், பங்களாப்புதூர், கவுந்தப்பாடி பகுதிகளில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து, மாலை அணிவித்தனர். பவானிசாகர் சுற்று வட்டாரத்தில் எம்.ஜி.ஆர், படத்துக்கு, அ.தி.மு.க., தொண்டர்கள், மக்கள், ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.
* அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தினர். இதில் துணை செயலாளர் சண்முகானந்தம், நகர அம்மா பேரவை செயலாளர் பாலுசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
*கொடுமுடி புது பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி தலைமையில், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் பெரியதம்பி முன்னிலையில், எம்.ஜி.ஆர்., போட்டோவுக்கு மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இளைஞரணி செயலாளர் சதாசிவம், முன்னாள் கவுன்சிலர் சாரதா விஸ்வநாதன் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, மக்களும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE