ஈரோடு: முக கவசம் அணியாத அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு, அபராதம் விதிக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கொரோனா, ஒமைக்ரான் மூன்றாவது அலை வேகம் பிடித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல், பொது இடங்களில் திரிவோருக்கு, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். ஈரோடு ப.செ.பார்க்கில் முக கவசம் அணியாத தனியார் டவுன் பஸ், மினி பஸ் டிரைவர்கள் இருவருக்கு, நேற்று தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அதேசமயம் அரசு போக்குவரத்து நிர்வாகம் அறிவுரை வழங்கியும், பெரும்பாலான அரசு பஸ் டிரைவர்கள், முக கவசம் அணியாமல் இயக்குகின்றனர். இது போன்றவர்களுக்கும் போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்று, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, அரசு கண்டக்டர், டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க, போலீஸ் உயரதிகாரிகள் பச்சைக் கொடி காட்டவில்லை என்பது தெரியவந்தது. கொரோனா தகுதி பார்த்தா வருகிறது? அப்படியானால் முக கவசம் அணியாத அரசு டிரைவர், கண்டக்டர்கள் மூலம் பயணிகளுக்கு தொற்று பரவுவதை, உயர் போலீஸ் அதிகாரிகள் உணரவில்லையோ? என்றும் கேள்வி எழுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE