தைப்பூச விழா திருக்கல்யாணம்

Added : ஜன 18, 2022
Advertisement
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கொரோனா பரவலால், இன்று நடக்க வேண்டிய தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதன்படி கைலாசநாதர் கோவிலில், நேற்று மாலை விநாயகர் வழிபாட்டுடன், தைப்பூச விழா நிகழ்ச்சி தொடங்கியது. கலச ஆவாஹணம் மற்றும் பிராயசித்த ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. பின்னர் முதல்கால

சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கொரோனா பரவலால், இன்று நடக்க வேண்டிய தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதன்படி கைலாசநாதர் கோவிலில், நேற்று மாலை விநாயகர் வழிபாட்டுடன், தைப்பூச விழா நிகழ்ச்சி தொடங்கியது. கலச ஆவாஹணம் மற்றும் பிராயசித்த ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. பின்னர் முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து, இரவு, 8:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தைப்பூச தினமான இன்று அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. உற்சவர் அபிஷேகம், கலசாபிஷேகத்தை தொடர்ந்து, காலை, 6:30 மணி முதல், 7:30 மணிக்குள் கைலாசநாதர் கோவில் உள் பிரகாரத்துக்குள் சுவாமி உலா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X