நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையிலேயே அலங்கார ஊர்திகள் தேர்வு: ராஜ்நாத் விளக்கம்

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (31)
Advertisement
புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
குடியரசு தினம், அலங்கார ஊர்தி, ராஜ்நாத், ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர், முதல்வர் ஸ்டாலின், முதல்வர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.


latest tamil news




இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: விதிகளின்படியே குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. மொத்தம் 29 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்தது.

நடப்பாண்டில், குடியரசு தின விழாவில் பங்கேற்க 12 அலங்கார ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகம் இடம்பெறவில்லை. முதல் 3 சுற்றுகள் வரை தமிழக ஊர்தி பரிசீலனையில் இருந்தது. இறுதிச்சுற்று பட்டியலில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறவில்லை. 2017, 2019, 2020,2021ம் ஆண்டுகளில் தமிழகத்தின் ஊர்தி இடம்பெற்றிருந்தது. நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே குடியரசு தின அணிவகுப்புக்கான ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜன-202205:58:30 IST Report Abuse
அப்புசாமி நிபுணர் குழு என்ப அண்ட்டார்ட்டிகாவிலிருந்தா வந்துச்சு? எல்லாம் இவிங்க நியமிக்கிற ஆளுங்கதானே?
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
18-ஜன-202218:43:24 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN திரு.ராஜ்நாத் சிங் இதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை, இந்த திமுக திராவிட கும்பல்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்கள் என தமிழக மக்களுக் தெரியும். நடுநிலையாளர்களும் தேசியவாதிகளும் மத்திய அரசு செய்யும் நற்செயலுக்கு என்றும் உறுதுணையாக இருப்பார்கள். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
18-ஜன-202218:08:45 IST Report Abuse
Pandi Muni ஈர வெங்காயத்தோட படத்தயும் வச்சிருப்பானுக. ஓடுங்கடான்னு துரத்தி விட்டுட்டானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X