தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்| Dinamalar

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

Added : ஜன 18, 2022 | |
சென்னை: சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று(ஜன.,18) தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.நாளை(ஜன.,29 முதல் ஜன.,22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்

சென்னை: சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று(ஜன.,18) தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.



நாளை(ஜன.,29 முதல் ஜன.,22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X