இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி| Dinamalar

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி

Updated : ஜன 19, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.அப்போது மோடி கூறியதாவது: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news


உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.


latest tamil news


அப்போது மோடி கூறியதாவது: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரசாயனம் பயன்படுத்தாமல், விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை அவர்களிடம் பா.ஜ.,வினர் விளக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஓட்டுப்போடுவதன் அவசியத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X