வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கோவிட் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நோயாளிகளுக்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் லேசாக இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் சிகிச்சை தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: லேசான கோவிட் பாதிப்பு உள்ளவர்களை வீட்டு தனிமையில் இருந்து கொள்ள அனுமதிக்கலாம். மிதமான பாதிப்பு உள்ளவர்களை கோவிட் வார்டுகளிலும், தீவிர பாதிப்பு உள்ளவர்களை அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க வேண்டும்.

மூச்சுத்திணறல் இல்லாதவர்களை லேசான பாதிப்பு உடையவர்களாகவும், அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் , சுவாச பிரச்னை உள்ளவர்கள் டாக்டரை அணுக வேண்டும். ஆக்சிஜன் அளவு 90- 93 சதவீதம் குறைந்து மூச்சுத்திணறல் உள்ளவர்களை மிதமான பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும்.
அதேபோல், குறைவான சுவாச விகிதம் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல் ஆக்ஸிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்தால் கடுமையான பாதிப்பாக கருத வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதிகளவு ஸ்டீராய்டுகளை பயன்படுத்தும் போது, கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால்,கோவிட் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE