பிரதமரின் டெலிபிராம்ப்டர் சொதப்பியதற்கு ராகுல் கிண்டல் விளக்கம்!

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (26)
Advertisement
புது டில்லி: உலக பொருளாதார மன்ற மாநாட்டில் (ஜன., 17) பிரதமர் மோடி பேசும் டெலிபிராம்ப்டர் வேலை செய்யாததால் சில விநாடிகள் மோடி உரையை நிறுத்த வேண்டியதானது. அதற்கு காங்.,ஸ் எம்.பி., ராகுல், 'மோடியின் பொய்களை டெலிபிராம்ப்டர் கூட ஏற்கவில்லை' என கிண்டல் செய்துள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் 5 நாள் மாநாடு டாவோஸ் நகரில் ஆன்லைன் வாயிலாக (ஜன., 17) தொடங்கியது. முதல் நாள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புது டில்லி: உலக பொருளாதார மன்ற மாநாட்டில் (ஜன., 17) பிரதமர் மோடி பேசும் டெலிபிராம்ப்டர் வேலை செய்யாததால் சில விநாடிகள் மோடி உரையை நிறுத்த வேண்டியதானது. அதற்கு காங்.,ஸ் எம்.பி., ராகுல், 'மோடியின் பொய்களை டெலிபிராம்ப்டர் கூட ஏற்கவில்லை' என கிண்டல் செய்துள்ளார்.



latest tamil news



உலகப் பொருளாதார மன்றத்தின் 5 நாள் மாநாடு டாவோஸ் நகரில் ஆன்லைன் வாயிலாக (ஜன., 17) தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 'இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கோவிட் காலங்களில், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா காப்பாற்றியது.' என குறிப்பிட்டார்.

அவரது உரையின் மத்தியில் டெலிபிராம்ப்டர் சில நிமிடங்கள் நின்று போனது. இதனால் அவரால் எடுத்து வந்த குறிப்புகளை கையாள முடியவில்லை. நடுவே உரையை நிறுத்திப் பின்னர் தொடங்கினார். இக்காட்சிகள் சமூக வலைதளங்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சியினரால் பரப்பப்பட்டு விமர்சிக்கப்பட்டது.


latest tamil news


இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள ராகுல், டெலிபிராம்ப்டரால் கூட பொய்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கிண்டல் செய்துள்ளார். அக்கருத்தை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202207:44:34 IST Report Abuse
Narayanan Krishnamurthy இதுநாள்வரை அதாவது காங்கிராட்ஸ்(காங்கிரஸ்)ஆட்சியில் இருந்தவரை பொய்யுரைகளையே பரப்பிவந்த டெலிபிரண்டர் இப்பொழுது உண்மைகளை மட்டுமே பேசக்கேட்பதால் தான் குழம்பிவிட்டது என்பதை ராகுல் புரிந்து கொள்ளவில்லை
Rate this:
பேசும் தமிழன்செம ஷாட்.... பப்பு போடுவது எல்லாமே நோ பால் தான்..... அதிலும் சிக்சர் அடித்து விட்டீர்கள்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-ஜன-202219:37:15 IST Report Abuse
M  Ramachandran இதன் மூலம் தெரிவது பின்னணியில் பப்பு அண்ட் ( மூளை ப சி) கம்பெனி யிருப்பாதாக தெரிகிறது.
Rate this:
Cancel
surchi - KANCHIPURAM,இந்தியா
19-ஜன-202214:22:48 IST Report Abuse
surchi இவரு அடிக்கடி வெளிநாடு ஓடுகிறர் எந்த ஊர் என சொன்னது உண்டா ஏன் செல்கிறார் என காங்கிரஸ் சோம்பு தூக்குபவர் சொல்வேறாரா
Rate this:
பேசும் தமிழன்!!!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X