வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கொரோனாவை பயன்படுத்தி போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வேலுார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நகரங்களை விட கிராமப்பகுதிகளில் காய்ச்சல், சளி, இருமல் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை செய்தால், அதிகம் செலவாகும் என்பதால், மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இதை பயன்படுத்தி போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கிராமப்பகுதிகளில், போலி டாக்டர்கள் வீடு, வீடாகச்சென்று, காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்களுக்கு சூரணம், கசாயம் கொடுத்து 100 முதல் 200 ரூபாய் வரை வாங்குகின்றனர். கட்டணம் குறைவாக இருப்பதால், போலி டாக்டர்களை நோயாளிகள் அதிகம் நாடுகின்றனர்.வேலுார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நகரங்களை விட கிராமப்பகுதிகளில் காய்ச்சல், சளி, இருமல் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை செய்தால், அதிகம் செலவாகும் என்பதால், மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
சில நேரம் இவர்கள் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளால் இறப்பு ஏற்படுகிறது. குளிர் காலத்திலும், கொரோனா தொற்று பரவும் போதும் போலி டாக்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வேலுார் மாவட்டத்தில், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஒடுக்கத்துார், லத்தேரி போன்ற பகுதிகளில் நுாற்றுக்கணக்கான போலி டாக்டர்கள் உள்ளனர்.முன்பு கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது கிளினிக் நடத்தாமல், வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பதால் அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இயலவில்லை என போலீசார் கூறுகின்றனர். மக்களே போலி டாக்டர்களை ஒதுக்கினால் தான் நிரந்திர தீர்வு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement